கோட்டூர்புரம் காவல் நிலையம் முன் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்களுக்கு தடை


கோட்டூர்புரம் காவல் நிலையம் முன் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்களுக்கு தடை
x
தினத்தந்தி 21 Aug 2021 12:34 PM GMT (Updated: 21 Aug 2021 12:34 PM GMT)

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம் முன் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

சென்னை, 

சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டின் அருகில் சாலை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் தங்கள் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியானது.

தொடர்ந்து காவல்நிலையத்தில் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகளை கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பொதுக்குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.  பொதுக்குழுவில் 3 புகார்கள் தொடர்பாக பார் கவுன்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். 

அதில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளை மீறி மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக, 7 வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராக இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story