தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Aug 2021 12:56 PM GMT (Updated: 21 Aug 2021 12:56 PM GMT)

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது, திரையரங்குகள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 6-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதன்படி 

* செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.

* 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப். 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். 

* ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். 

* தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

* கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி 

* இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி

* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி

* வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட அனுமதி

* கடற்கரைகளில் மக்களுக்கு மீண்டும் அனுமதி (இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்)

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story