தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
x
தினத்தந்தி 22 Aug 2021 7:31 AM GMT (Updated: 22 Aug 2021 7:31 AM GMT)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதாவது வரும் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்பட தமிழகத்தில் ஆங்காங்கே  வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 17 மாவட்டங்களில் கனமழைக்கு வய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story