மாநில செய்திகள்

மத்திய ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால் வெற்றி: கி.வீரமணி + "||" + Victory if all democratic forces unite to overthrow the central government: K. Veeramani

மத்திய ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால் வெற்றி: கி.வீரமணி

மத்திய ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால் வெற்றி: கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2024-ல் மத்திய ஆட்சியை, அப்போது நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் மாற்றுவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி புதுடெல்லியில் காணொலி மூலம் ஒத்த கருத்துள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; சரியான ஜனநாயக பாதுகாப்பு நடவடிக்கையும் ஆகும். 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளதில், தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். 2024 தேர்தலுக்கான ஆயத்தமாக முதல் முயற்சியை இப்போதே தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

மத்திய அரசுக்கு எதிராக அடுத்த மாதம் (செப்டம்பர்) 20 முதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே அணியில் திரண்டால், வெற்றிதானே கனிவது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்
உத்தரபிரதேச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் கி.வீரமணி விருப்பம்.
2. கொரோனா சூழலில் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு தான்: கி.வீரமணி
கொரோனா சூழலில் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு தான். இது தெரியாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்காத தி.மு.க. அரசை விமர்சிக்க வேண்டாம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் கி.வீரமணி நம்பிக்கை
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் கி.வீரமணி நம்பிக்கை.
4. தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை: வெற்றி இலக்கை அடையும் நம்பிக்கையை தருகிறது கி.வீரமணி பாராட்டு
தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை: வெற்றி இலக்கை அடையும் நம்பிக்கையை தருகிறது கி.வீரமணி பாராட்டு.
5. கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை
கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை கி.வீரமணி அறிக்கை.