மாநில செய்திகள்

கொடநாடு விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை + "||" + Kodanadu affair: AIADMK Edappadi Palanisamy consultation with MLAs

கொடநாடு விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொடநாடு விவகாரம்:  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.


சென்னை,

தமிழக சட்டசபை கடந்த 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று கூடவுள்ளது.  இதில், துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடக்கிறது.

இதற்கிடையில், கொடநாடு விவகாரம் பற்றி காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளது.  இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில், அவையில் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன?
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
2. வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்: மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
3. மழை பாதிப்பு: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு...!
மழை சேதங்கள் குறித்து கணக்கிட தமிழகம் வந்த மத்திய குழுவினர் தலைமைச்செயலாளருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னை, கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 2 குழுக்களாக சென்று இன்று ஆய்வு செய்கின்றனர்.
4. பிரதமர் மோடி வரும் 20, 21 தேதிகளில் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை
பிரதமர் மோடி வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.பி.க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
5. காங்கிரஸ் பொது செயலாளர்களுடன் வரும் 28ந்தேதி சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொது செயலாளர்களுடன் வருகிற 28ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.