மாநில செய்திகள்

கோடநாடு விவகாரம்; அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் + "||" + Kodanad issue not re-investigated

கோடநாடு விவகாரம்; அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

கோடநாடு விவகாரம்; அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
கோடநாடு விவகாரம் மறு விசாரணை செய்யப்படவில்லை, மேலதிக விசாரணை தான் செய்யப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,

கோடநாடு விவகாரம் குறித்து  அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிலவரம் என்ன? என்று மக்கள் கேட்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவரிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கோடநாடு விவகாரம் பற்றி முரண்பாடாக ஜெயக்குமார் பேசுகிறார். 

கோடநாடு விவகாரம் பற்றி முதலில் பேசியது அதிமுகவினர் தான். கோடநாட்டில் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. கோடநாடு விவகாரம் பற்றி ஜெயக்குமார் பதற்றத்தில் பேசுகிறார்.  

சட்டம் ஒழுங்கு விவகாரம் பற்றி முதல்வர் பேசக் கூடாது என ஜெயக்குமார் சொல்வது வேடிக்கையானது.  சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரத்தை கொண்டு வந்தது அதிமுக தான். கோடநாடு விவகாரம் மறு விசாரணை செய்யப்படவில்லை, மேலதிக விசாரணை தான் செய்யப்படுகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. "கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை"...விசாரணை நடத்துவதில் தவறில்லை" - சரத்குமார் பேட்டி
கோடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை என்றும் விசாரணை நடத்துவதில் தவறில்லை என ச.ம.க தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
2. கோடநாடு வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய மனு மீது சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
3. கோடநாடு வழக்கு: போலீஸ் மேல்விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
4. கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்து வருகின்றனர்.