மாநில செய்திகள்

கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு + "||" + Kodanadu affair: Petition seeking permission to investigate Edappadi Palanisamy and Sasikala

கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு

கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு
கொடநாடு விவகாரத்தில், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று புலன் விசாரணைக்குழு மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை, 

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை; முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை' - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
2. கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை அதிகாரிகளின் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுடன் நடைபெர வாய்ப்பு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. கொடநாடு வழக்கில் என்னை சேர்க்க சதி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
மக்களை திசை திருப்ப திமுக அரசு நாடகமாடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.