எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது சட்டமன்றத்தில் கோடநாடு விவகாரத்தை விவாதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?


எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது சட்டமன்றத்தில் கோடநாடு விவகாரத்தை விவாதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்?
x
தினத்தந்தி 23 Aug 2021 8:17 PM GMT (Updated: 23 Aug 2021 8:17 PM GMT)

எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது சட்டமன்றத்தில் கோடநாடு விவகாரத்தை விவாதிக்க ஆர்வம் காட்டுவது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

சென்னை,

தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்கீழ், கோடநாடு விவகாரம் குறித்து பேச காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை அனுமதி கோரியிருக்கிறார். பொதுவாகவே சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண். சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன.

கோடநாடு விவகாரம் அவசரமாக எடுத்து பேசவேண்டிய விஷயமா?

நானும் சபாநாயகராக இருந்திருக்கிறேன். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதித்தது கிடையாது. இது ஒரு உரிமை மீறல் பிரச்சினை ஆகும். சட்டமன்ற மரபை காங்கிரஸ் மீறுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு சம்பவமும் கூட. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேசவிடாமல் செய்யவும், மனரீதியாக துன்புறுத்தல் அளிக்கவும் இதுபோல செய்யும்போது, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவே அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story