மயிலாப்பூர் கோவில் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை


மயிலாப்பூர் கோவில் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 23 Aug 2021 8:55 PM GMT (Updated: 23 Aug 2021 8:55 PM GMT)

மயிலாப்பூர் கோவில் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் 5 பேரை இடைநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அறங்காவலர் ஸ்ரீதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதில், கோவிலின் 5 அறங்காவலர்கள் மீது 27 குற்றச்சாட்டுகள் கூறி இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பி அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இது சட்ட விரோதமானது. இதில் ஏற்கனவே 2 அறங்காவலர்கள் இறந்து விட்டனர். 2 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அப்படியிருக்கும்போது இடைநீக்கம் செய்தது தவறானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, பதில் அளிக்க அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதி, “இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்காக வக்கீலாக இருக்கும்போது நான் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கை நான் விசாரிக்கவில்லை’’ என்று வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

Next Story