மாநில செய்திகள்

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் + "||" + The woman who tried to set fire to the office of the Deputy Commissioner of Ambattur demanding action against her husband

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில இளம்பெண் தீ்க்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி,

திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவர், 23-12-2019 அன்று அம்பத்தூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.


இதற்கிடையில் எல்லப்பனுக்கு, சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் கடந்த ஒரு மாதமாக எல்லப்பன், கவிதாவை விட்டு பிரிந்து அந்த பெண்ணுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டதால் கவிதாவை எல்லப்பன் மிரட்டியதுடன், அவருடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து கவிதா, தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மதியம் ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் வந்தார். அப்போது அவர், அலுவலக நுழைவு வாயிலில் நிறுத்தி இருந்த துணை கமிஷனர் கார் முன்பு திடீரென தான் தயாராக பாட்டிலில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து துணை கமிஷனர் மகேஷ், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கவிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
2. சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை
நடத்தையில் சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
3. பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
4. ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டுப்பாடி போலீசார் முன்பு நடனமாடி இளம்பெண் ரகளை
முககவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால், ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடி, ரெயில்வே போலீசார் முன்பு நடனமாடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5. வடலூர் அருகே பரபரப்பு இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
வடலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.