சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Aug 2021 5:04 AM GMT (Updated: 2021-08-24T10:34:46+05:30)

தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேரவையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  விதி எண் 110ன் கீழ்  மு.க ஸ்டாலின் கூறியதாவது, “ மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது” என்றார். 


Next Story