சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 25 Aug 2021 2:06 AM GMT (Updated: 25 Aug 2021 2:06 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.  அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. 

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வருவதால்,  பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.   

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.52 ஆகவும் விற்பனையானது. 


Next Story