மாநில செய்திகள்

கருணாநிதி நூலகம்; ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், மாற்ற தயார்-செல்லூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில் + "||" + Karunanidhi Library; Tell me if there is evidence, ready to change - MK Stalin's answer to Cellur Raju

கருணாநிதி நூலகம்; ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், மாற்ற தயார்-செல்லூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்

கருணாநிதி நூலகம்; ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், மாற்ற தயார்-செல்லூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்
மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நூலகத்திற்கான இடத்தில் பென்னிகுவிக் வசித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாக செல்லூர் ராஜூக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சென்னை,

சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பென்னிக்குவிக்

செல்லூர் ராஜூ (அ.தி. மு.க.):- மதுரையில் பென்னிகுவிக் வாழ்ந்த கட்டிடத்தை இடித்து விட்டு கருணாநிதி பெயரில் நூலகம் கட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த இடத்தை இடிக்காமல் வேறு பகுதியில் கருணாநிதி பெயரில் நூலகம் கட்ட வேண்டும்.


அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்:- உறுப்பினர் தவறான தகவல்களை கூறக்கூடாது. நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுவிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து. 1911-ம் ஆண்டு பென்னிகுவிக் மரணம் அடைந்து விட்டார். அந்த நினைவு இல்லம் 1912-ம் ஆண்டு முதல் 1915-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. அவர் இறந்த பிறகு கட்டப்பட்ட கட்டிடத்தில் அவர் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- உறுப்பினர் செல்லூர் ராஜூ, பென்னிகுவிக் நினைவிடத்தை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கருணாநிதி பெயரால் நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்போதும் பொதுப்பணித் துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போதும் சொல்கிறேன், நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாக கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை நான் சொல்லியிருக்கிறேன்.

பெருந்தன்மையை குறைக்கும்

செல்லூர் ராஜூ: (அ.தி. மு.க.):- எல்லோரும் அப்படி தான் சொல்கிறார்கள். அதை தான்...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இப்படி சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாக சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையை குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
3. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
4. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
5. ‘அனைத்து விவசாயிகளும் பயிரை காப்பீடு செய்யுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.