சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: மதன் ரவிச்சந்திரன் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்


சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: மதன் ரவிச்சந்திரன் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 25 Aug 2021 11:59 PM GMT (Updated: 25 Aug 2021 11:59 PM GMT)

சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்: மதன் ரவிச்சந்திரன் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்.

சென்னை,

பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மதன் ரவிச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலையை சந்தித்து, பா.ஜ.க.வின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேவேளையில் பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story