திருச்செந்தூர் கோவிலில் நாளைமுதல் பக்தர்களுக்கு அனுமதியில்லை - கலெக்டர் அறிவிப்பு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Aug 2021 11:49 AM GMT (Updated: 26 Aug 2021 11:49 AM GMT)

திருச்செந்தூர் கோவிலில் நாளைமுதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர், 

கடந்த 25 ஆம் தேதி கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என அறிவித்திருந்தது. 

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (27-08-2021) முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் ஆவணி திருவிழா, ஆகம விதிப்படி பக்தர்களின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பிரசித்தி பெற்ற, பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story