மாநில செய்திகள்

நடிகர் சூர்யாவின் பட நிறுவனம் பெயரில் மோசடி முயற்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு + "||" + Fraud attempt in the name of actor Surya's film company has been lodged with the Commissioner's Office

நடிகர் சூர்யாவின் பட நிறுவனம் பெயரில் மோசடி முயற்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

நடிகர் சூர்யாவின் பட நிறுவனம் பெயரில் மோசடி முயற்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு
நடிகர் சூர்யாவின் பட நிறுவனம் பெயரில் மோசடி முயற்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு.
சென்னை,

நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயரில் விளம்பரம் ஒன்று போலியான இணையதள முகவரி மூலம் வெளியாகி உள்ளது.

புதுமுக நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுவது போலவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இது தொடர்பாக நடிகர் சூர்யாவின் 2டி பட நிறுவனம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் தேர்வு குறித்து வெளியிடப்பட்டு உள்ள விளம்பரம் போலியானது என்றும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வெளியான இதை பொதுமக்கள் நம்பக்கூடாது. ரூ.3,500 பணம் கட்ட சொல்லப்பட்டு உள்ளது. அதை நம்பி யாரும் பணம் செலுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புகார் பெட்டி
புகார் பெட்டி
2. புகார் பெட்டி
புகார் பெட்டி
3. புகார் பெட்டி
புகார் பெட்டி
4. நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி
போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் சஞ்சனா கல்ராணி, நண்பர் மீது மோசடி புகார் கூறியிருக்கிறார்.
5. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்தவர் கண்ணீர் புகார் மோசடி நபர் அதிரடி கைது
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்த நபர் கண்ணீருடன் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.