மாநில செய்திகள்

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி + "||" + 2 killed in electric shock near Mayiladuthurai: Rs 5 lakh financial assistance to the families of the deceased

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி மற்றும் நிவாரண உதவி அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் கடந்த 25-ந் தேதி (நேற்று முன்தினம்) காலை 6.45 மணியளவில் கனரக வாகனம் சென்றதால் ஒரு வீட்டின் சர்வீஸ் மின் இணைப்பில் இருந்து மின்சார வயர் அறுந்து தொங்கியது.


இந்த அறுந்து தொங்கிய மின்சார வயர் பட்டு, தில்லைவிடங்கன் கிராமம், கன்னிக்கோவில் தெருவில் வசிக்கும் சின்னத்தம்பியின் மகன் சிங்காரவேலு என்பவரும், குளக்கரை தெருவில் வசிக்கும் லூர்துசாமி என்பவரின் மகன் அரவிந்த் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர் என்ற துயரச் செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிர் இழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி
பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
2. கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை ஜப்தி செய்தபோது முதியவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி சீல் வைத்த நிதி நிறுவனத்தினர்
கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை ஜப்தி செய்தபோது வீட்டுக்குள் முதியவரை வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்தனர்.
3. ‘தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
‘தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
4. சிறு, குறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
5. சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பெற்றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறுநீரக பிரச்சினைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.