மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்


மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 27 Aug 2021 6:02 AM GMT (Updated: 27 Aug 2021 6:02 AM GMT)

மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பா.ஜ.க. எதிர்க்கும்; தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்கும்

சென்னை

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி  மேகதாது அணை  கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசும் போது மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது; தேவைப்பட்டால் தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்பதைத் தெரிவிக்க அடையாள போராட்டத்தை அறிவிக்கலாம்  என கூறினார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தி பேசியதாவது:-

மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு பா.ஜ.க. எதிர்க்கும்; தமிழ்நாடு  அரசுக்கு துணை நிற்கும் என கூறினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது  கட்சி வித்தியாசம் இல்லாமல் இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவோம். 

இருமொழிக் கொள்கை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் நாம் ஒற்றுமையுடன் இருப்போம். கட்சிகள் வித்தியாசமின்றி ஒரே கருத்துடன் செயல்பட்டால் மேகதாது அணை பிரச்சினையில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். நாம் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது." என கூறினார்.

Next Story