9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியீடு


9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியீடு
x
தினத்தந்தி 27 Aug 2021 10:14 PM GMT (Updated: 27 Aug 2021 10:14 PM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியீடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது.

19.3.2021 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்த வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை 31-ந் தேதிக்குள் வெளியிட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால் முதலில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story