மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை + "||" + The mother committed suicide by jumping into the same well without mourning the death of the young man who fell into the well

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால், துக்கம் தாங்காமல் தாய் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து கே.எம்.அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பெரியதாய் (வயது 60). இவர்களுடைய மகன் திருமலைகுமார் (32). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.


நேற்று முன்தினம் மாலையில் திருமலைகுமார் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய திருமலைகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய் தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இறந்த திருமலைகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மகன் இறந்த துக்கத்தில் பெரியதாய் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று அதிகாலையில் தனது தோட்டத்துக்கு சென்று, மகன் தவறி விழுந்து இறந்த கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததால், துக்கத்தில் தாயும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
2. திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
திருவள்ளூரில் குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது.
3. மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு
மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு.
4. செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
செய்யூர் அருகே கூட்ட நெரிசலில் வாக்குச்சாவடியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு.
5. அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்
அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்