பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 30 Aug 2021 1:55 AM GMT (Updated: 30 Aug 2021 1:55 AM GMT)

செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய கொரோனா பரவல் நிலவரம், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

இது தவிர, கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Next Story