தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு
x
தினத்தந்தி 30 Aug 2021 5:22 AM GMT (Updated: 30 Aug 2021 5:22 AM GMT)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.35,904க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,488க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story