வைகோவுடன் இலங்கை மந்திரி சந்திப்பு


வைகோவுடன் இலங்கை மந்திரி சந்திப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 10:24 PM GMT (Updated: 30 Aug 2021 10:24 PM GMT)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், அந்நாட்டு தோட்ட வீடமைப்பு சமூக உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான ஜீவன் தொண்டைமான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்தார்.

சென்னை,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், அந்நாட்டு தோட்ட வீடமைப்பு சமூக உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான ஜீவன் தொண்டைமான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தனது தந்தை ஆறுமுகம் தொண்டைமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதற்காக வைகோவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ‘‘உங்கள் தாத்தா சவுமியமூர்த்தி தொண்டைமானுடன் எனக்கு நீண்ட கால பழக்கம் உண்டு. தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். உங்கள் தந்தை ஆறுமுகம் தொண்டைமான் சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பார். எதிர்பாராத வகையில், குறைந்த வயதில் அவர் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியாக இருந்தது. 26 வயதிலேயே நீங்கள் மந்திரி பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். என் வாழ்த்துகள். தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன’’ என்று வைகோ அப்போது குறிப்பிட்டார்.

அப்போது, ‘தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, நுவரேலியாவில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும். தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க இருக்கிறோம்’ என ஜீவன் தொண்டைமான் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக தமிழக அரசு ரூ.300 கோடி ஒதுக்கி இருப்பதை வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Next Story