மாநில செய்திகள்

மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார் + "||" + District wise BJP Leader Annamalai tour starts tomorrow in Tenkasi

மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்

மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்
மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்.
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வருகிற 1-ந்தேதி (நாளை) முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் 1-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.


நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், பரமக்குடி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, சென்னை, திருவாரூர், மதுரை, கன்னியா குமரி, சிவகங்கை, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இதற்காக நிர்வாகிகள் கொண்ட சுற்றுப்பயண குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
2. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு.
3. எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை, எல்.முருகன் சந்திப்பு
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
4. பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை நடத்தாமல் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம் கலெக்டரிடம் நேரில் புகார்
பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை தலைவர், கவுன்சிலர்கள் நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவர்கள் தர்மபுரி கலெக்டரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது
‘தகைசால் தமிழர்' விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் என்.சங்கரய்யாவுக்கு விருதை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.