போதை பொருட்கள் விற்பனை: கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் - மு.க.ஸ்டாலின்


போதை பொருட்கள் விற்பனை: கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:13 AM GMT (Updated: 31 Aug 2021 5:13 AM GMT)

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது.

கேள்வி நேரத்தின் போது  ஜி.கே.மணி எம்.எல்.ஏ  தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படுமா என  எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது; போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

போதை போருள் விற்போர், கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.

Next Story