ஜெ. பல்கலை. இணைப்பை வன்மையாக கண்டிக்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம்


ஜெ. பல்கலை. இணைப்பை வன்மையாக கண்டிக்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:56 AM GMT (Updated: 31 Aug 2021 8:56 AM GMT)

உயர்கல்வி சேர்க்கை உயர்ந்ததற்கு காரணமானவர் ஜெயலலிதா என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா - வாலஜா சாலையில் அமர்ந்த பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  பின்னர் சிறிது நேரத்தில் கைதான அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  

செய்தியாளர்களுக்குப்  பேட்டி அளித்த  ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது;- உயர்கல்வி சேர்க்கை உயர்ந்ததற்கு காரணமானவர் ஜெயலலிதா. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
ஜெ. பல்கலை. இணைப்பை வன்மையாக கண்டிக்கிறோம். 

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழக நீக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்கக் கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. கல்வித்துறையில் எந்த மாநிலமும் செய்ய முடியாத சாதனைகளை செய்து காட்டியவர் ஜெயலலிதா. மாநில வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்வித்துறைக்காக ஒதுக்கியவர் ஜெயலலிதா” என்றார். 


Next Story