தமிழகத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு


தமிழகத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
x
தினத்தந்தி 1 Sep 2021 12:07 AM GMT (Updated: 1 Sep 2021 12:07 AM GMT)

தமிழகத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு.

சென்னை,

தமிழகத்தில் 12 கூடுதல் எஸ்.பி.க்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் எஸ்.பி. சங்கர் சென்னை உளவுப்பிரிவு (சிறப்பு) கூடுதல் எஸ்.பி.யாகவும், கோவை போலீஸ் பயிற்சி பள்ளியின் கூடுதல் எஸ்.பி.கண்ணன் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் எஸ்.பி.ஜோஸ் தங்கைய்யா ஆகியோர் தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் எஸ்.பி.க்களாகவும்,

விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய தேவநாதன் கோவை மாவட்ட ‘சைபர் கிரைம்’ குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாகவும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் எஸ்.பி. விவேகானந்தன் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் தலைமையக கூடுதல் எஸ்.பி.யாகவும், தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் எஸ்.பி. ஜான்சன் திருப்பூர் மாவட்ட போலீஸ் தலைமையக கூடுதல் எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக இருந்த சின்ராம் திருப்பூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை கூடுதல் எஸ்.பி.யாகவும், திருப்பூர் மாவட்ட போலீஸ் தலைமையக கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி நீலகிரி மாவட்ட போலீஸ் தலைமையக கூடுதல் எஸ்.பி.யாகவும், இப்பதவியில் இருந்த ஜனார்த்தனம் கோவை மாவட்ட போலீஸ் பயிற்சி பள்ளியின் கூடுதல் எஸ்.பி.யாகவும், கோவை மாவட்ட ‘சைபர் கிரைம்’ குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. சங்கு நெல்லை மாவட்ட ‘சைபர் கிரைம்’ குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாகவும், நீலகிரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சசிகுமார் அந்த மாவட்டத்தின் குற்ற ஆவணக் காப்பக பிரிவு டி.எஸ்.பி.யாகவும், கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சந்திரசேகர் நீலகிரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Next Story