மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை + "||" + Schools open: 85 percent of students attend on the first day

பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை

பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை
பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.
சென்னை, 

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் நாளில் இடவசதி இருந்த பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். இட வசதி இல்லாத பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிகள் திட்டமிட்டு, அதன்படி நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்தவகையில் முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சுமார் 75 முதல் 85 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. “பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை” : தவறான தகவல் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
2. மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறப்பு
மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.
3. தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலை சைதை துரைசாமி திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை சைதை துரைசாமி திறந்து வைத்து பேசினார்.
4. 19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த அவுரங்காபாத் உயிரியல் பூங்கா திறப்பு
கொரோனா காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த அவுரங்காபாத் உயிரியல் பூங்கா தற்போது திறக்கப்பட்டுள்ளது.
5. 4 மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.