மாநில செய்திகள்

விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் - விஜயபிரபாகரன் பேட்டி + "||" + Vijaykanth is in good health - Vijayaprabhakaran interview

விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் - விஜயபிரபாகரன் பேட்டி

விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் - விஜயபிரபாகரன் பேட்டி
விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் கூறினார்.
மதுரை, 

மதுரை முனிச்சாலை பகுதியில் தே.மு.தி.க. நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 

"தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். தி.மு.க. ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய 6 மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும்.

இதுவரை தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் திறந்தநிலையில் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார்" .

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை தரமாக புதுப்பிக்க வேண்டும் தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
ஓராண்டுக்குள் சேதம்: புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை தரமாக புதுப்பிக்க வேண்டும் தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை.
2. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் விஜயகாந்த் கோரிக்கை.
3. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்.
4. போலீசாருக்கு வார விடுமுறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு விஜயகாந்த் பாராட்டு
போலீசாருக்கு வார விடுமுறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு விஜயகாந்த் பாராட்டு.
5. பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் விஜயகாந்த் வேண்டுகோள்
விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் விஜயகாந்த் வேண்டுகோள்.