மாநில செய்திகள்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + Charge sheet filed in 2nd case registered against actress Meera Mithun

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களைப் பற்றிய அவதூறான வகையில் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த மீராமிதுனை கடந்த ஆகஸ்ட் 14 தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், சென்னை எம்கேபி நகரைச் சோ்ந்த ஜோ மைக்கேல் பிரவீண், என்பவா் சில மாதங்களுக்கு முன்பு எம்கேபி நகா் காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது ஒரு புகாா் அளித்தாா்.அந்த புகாரில், மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும், அவா் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். இந்த புகாா் தொடா்பாக எம்கேபி நகா் போலீஸாா் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் எழும்பூர் காவல்நிலையத்தில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் என்ற 2 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீரான் மிதுன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
3. நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; சென்னை கோர்ட்டில் இன்று விசாரணை
நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வருகிறது.
4. மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷாம் கைது
கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.