மாநில செய்திகள்

முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் + "||" + Sexual harassment of alumni's mother 2 more cases against Sivashankar Baba

முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்

முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை:  சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள்
முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் தனியார் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் மாணவியின் தாயாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக   சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
வேடசந்தூரில் சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டு இடமாற்றம்
சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவர், அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வந்த 34 வயது பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
3. பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ வழக்கு
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என்று சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார்.