மாநில செய்திகள்

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா சக ஆசிரியர்கள், மாணவிகள் அதிர்ச்சி + "||" + Corona colleagues, students shock government school teacher in Cuddalore

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா சக ஆசிரியர்கள், மாணவிகள் அதிர்ச்சி

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா சக ஆசிரியர்கள், மாணவிகள் அதிர்ச்சி
கடலூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்,

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதேபோல் கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்திற்கும் மாணவிகள் வருகை தந்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். அப்போது ஓய்வறையில் அமர்ந்து இருந்த இடை நிலை ஆசிரியை ஒருவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதனால் அவரை சக ஆசிரியர்கள் தனியாக அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.


ஆசிரியைக்கு கொரோனா

அவருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனை எடுத்து இருந்தார். அவருக்கு காலை 11 மணி அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி, ஒருவர் பேசி தகவல் தெரிவித்தார். அவரது மகளுக்கும் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதை அறிந்ததும் சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியரை பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த தகவல் நேற்று தான் வெளியானது. இதனிடையே அந்த ஆசிரியை இருந்த அறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. நாட்டில் இதுவரை மாநிலங்களுக்கு 102 கோடி தடுப்பூசி வினியோகம் - மத்திய அரசு
கொரோனாவுக்கு எதிராக நாட்டில் இதுவரை மாநிலங்களுக்கு 102 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
4. புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
5. மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.