மாநில செய்திகள்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம் + "||" + Egmore court has granted bail in two cases registered against actress Meera Mithun

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். 

அப்போது தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 2 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2வது வழக்கில் 30 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்; சென்னை கோர்ட்டில் இன்று விசாரணை
நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வருகிறது.
4. மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷாம் கைது
கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னை அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.