மாநிலங்களவை எம்.பி.யாக தி.மு.க. வை சேர்ந்த முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு


மாநிலங்களவை எம்.பி.யாக தி.மு.க. வை சேர்ந்த முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 3 Sep 2021 11:01 AM GMT (Updated: 3 Sep 2021 11:01 AM GMT)

மாநிலங்களவையில் தி.மு.க.எம்.பிக்களின் பலம் 8 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

அ.தி.மு.கவை  சோந்த  மாநிலங்களவை எம்.பி. ஏ. முகம்மது ஜான்  மறைவால் தமிழ்நாட்டில் காலியாக இருந்த மாநிலங்களவை  எம்.பி. இடத்திற்கு செப்டம்பா் 13-ஆம் தேதி இடைத் தோதல் நடைபெறும் என தோதல் ஆணையம் அறிவித்தது. 

தி.மு.க . சாா்பில் எம்.எம்.அப்துல்லா  வேட்பாளராக அறிவிக்கபட்டார்.  அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர்  போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலரிடமிருந்து பெற்றுக் கொண்டார் எம்.எம். அப்துல்லா.

மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் தி.மு.க.வின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 வரை எம்.எம். அப்துல்லா மாநிலங்களவை எம்.பியாக செயல்படுவார்.


Next Story