மாநில செய்திகள்

திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் + "||" + Do not try to create unnecessary confusion regarding the Dravidian barn book

திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்

திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்
திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.
சென்னை,

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்க இலக்கிய வாழ்வியலை புத்தகமாக வெளியிடுதல் மற்றும் திராவிட களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாக சில தவறான தகவல்கள் சிலரால் ஊடகங்களில் திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன.


தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள 10-வது அறிவிப்பு, 2 அம்சங்களைக் கொண்டது. முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பது.

2-வது அம்சம் என்னவென்றால் கால்டுவெல் தொடங்கி எமனோ, பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளைத் தொகுத்து திராவிட களஞ்சியம் என்ற தனி புத்தகமாக வெளியிடப்படும் என்பதாகும்.

மேற்சொன்ன 2 பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள். எனவே, அறிவிப்புகளைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
2. மின் வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்
மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
3. பெரிய கோவில்களோடு வருவாய் குறைவான கோவில்களை இணைக்க நடவடிக்கை சேகர்பாபு பேட்டி
வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேகர்பாபு தெரிவித்தார்.
4. சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
2015-ம் ஆண்டு கனமழையில் சென்னை தத்தளித்த நிலை மீண்டும் வராத வகையில், நகரம் முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
5. தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.