நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை - அமைச்சர் கே.என்.நேரு


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை - அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 4 Sep 2021 3:31 AM GMT (Updated: 2021-09-04T09:01:04+05:30)

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

சென்னை, 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது” என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

Next Story