மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு: கேரளாவில் உள்ள 8 பேரை விசாரிக்க போலீசார் திட்டம்! + "||" + Kodanad case: Police plan to investigate 8 people in Kerala!

கோடநாடு வழக்கு: கேரளாவில் உள்ள 8 பேரை விசாரிக்க போலீசார் திட்டம்!

கோடநாடு வழக்கு: கேரளாவில் உள்ள 8 பேரை விசாரிக்க போலீசார் திட்டம்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கேரளாவில் உள்ள 8 பேரையும் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜை போலீசார் தேடினர். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் உள்ள 8 நபர்களையும் மீண்டும் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரை அழைக்க நீலகிரி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் 8 பேரும் கேரளாவில் தற்போது உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
2. கொரோனா கட்டுப்பாடுகள்: கேரளாவில் 25 யானைகள் பலி..!!
கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியாக கேரளாவில் இதுவரை 25 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவு..!
கொரோனா தொற்று காலத்தில் கேரளாவில் குழந்தை பிறப்பு சரிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
5. கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.