மாநில செய்திகள்

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம் + "||" + Thanks to everyone who said consolation: O. Bunnieselvam

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம்

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம்
தனது மனைவி மறைவையொட்டி ஆறுதல் கூறிய அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.
சென்னை,

தனது மனைவி மறைவையொட்டி ஆறுதல் கூறிய அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக  நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ என் மனைவி ப.விஜயலட்சுமி, செப்.1-ஆம் தேதி காலை இயற்கை எய்தினாா் என்ற செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி, கடிதங்கள், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியன மூலமாகவும் வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த இந்திய குடியரசுத் தலைவா் முதல் அதிமுக கட்சித் தொண்டா்கள் வரை மட்டுமின்றி, திரைப்படத் துறையினா், தொழிலதிபா்கள், காவல்துறை நண்பா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வாா்த்தைகளும் எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் சக்தியையும் கொடுத்ததாக நான் மனப்பூா்வமாக உணா்கிறேன். இதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என உறுதி-மு.க ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி
ஜெயலலிதா சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
2. விமானக் கட்டணத்துக்கு இணையாக தனியார் பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது - ஓபிஎஸ்
பண்டிகை விடுமுறையை முன்னிட்டுத் தமிழகத்தில் விமானக் கட்டணத்துக்கு இணையாக தனியார் பேருந்துக் கட்டணம் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் குற்றம்ச் சாட்டியுள்ளார்.
3. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
4. ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
5. ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு
ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.