மாநில செய்திகள்

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை + "||" + SBI ATM robbery case: Chennai Police recommend to Tamil Nadu Home Ministry to transfer to CBI

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்பக் குறைப்பாட்டை பயன்படுத்தி கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல், மாநிலம் முழுவதும் பணத்தைத் திருடியது. இக்கும்பல், தமிழகம் முழுவதும் சுமாா் 30 ஏடிஎம் மையங்களில் ரூ.1 கோடி வரை திருடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கும்பலைக் கைது செய்ய சென்னை காவல்துறையின் அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபடுவது அரியானாவைச் சோந்த கும்பல் என்பதும் 14 மாநிலங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் நூதன கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழக உள்துறைக்கு சென்னை காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளது. 14 மாநிலங்களில் கொள்ளை நடந்துள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சென்னை காவல்துறையின் பரிந்துரையை விரைவில் மத்திய அரசின் உள்துறைக்கு, தமிழக உள்துறை அனுப்ப உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்
கோடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி விசாரணைக்கு ஆஜர்
2. கோடநாடு வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய மனு மீது சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
3. கோடநாடு எஸ்டேட் மேல் 3 நாட்களாக பறந்த ஆள் இல்லா விமானம் ; போலீசில் புகார்
தொடர்ந்து 3 நாட்களாக எஸ்டேட் மேல் டிரோன் பறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
4. கோடநாடு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை...!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: டிரைவர் கனகராஜின் மனைவி உள்பட 4 பேரிடம் ரகசிய விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், விபத்தில் மரணம் அடைந்த கனகராஜின் மனைவி உள்பட 4 பேரிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஆவணங்களை திரட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.