மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம் + "||" + Water level status of Mettur Dam

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.83 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையின் காரணமாக, கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அந்த அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.69 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 73.83 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 22,076 கன அடியிலிருந்து 17,712 கன அடியாகக் குறைந்ததுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 36.08 டி.எம்.சி.யாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,559 கன அடியாக சரிவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 15,409 கன அடியில் இருந்து 10,559 கன அடியாக குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.68 அடியாக குறைவு
மேட்டூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,164 கன அடியில் இருந்து 9,007 கன அடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 9,875 கன அடியில் இருந்து 10,164 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.