மாநில செய்திகள்

சென்னை: தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா - ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல் + "||" + Chennai: Corona for a private school student - School closure for a week

சென்னை: தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா - ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல்

சென்னை: தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா - ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல்
சென்னையில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை தினமும் 50 சதவீதம் என சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படத்தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா பரவியதை தொடர்ந்து அந்தப்பள்ளி பள்ளி ஒருவாரம் மூடப்பட்டது. மேலும் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நாளை 6-வது மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் நாளை (சனிக்கிழமை) 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், தற்போது 4.61 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
3. அக்.20: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
4. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.
5. சென்னை: ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை
சென்னை, ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை செலுத்தினார்.