ஆன் லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசிடம் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி


ஆன் லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசிடம் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 7 Sep 2021 10:17 AM GMT (Updated: 7 Sep 2021 10:17 AM GMT)

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை

இன்று சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி பேசும் போது   ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; ஆர்டரை பெண்கள் வாங்கினால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் கூறினார்.

சபாநாயகர் பாவு; அவ்வாறு வெட்கப்படும் ஆண்கள் ஆன்லைன் மூலம் மதுவை வாங்கக்கூடாது என கூறினார் 

தொடர்ந்து மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசியதாவது;-

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். மாதத் தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும். மொத்தம் 25,009 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.

Next Story