மாநில செய்திகள்

மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா + "||" + A corona infection has infected 24 people who attended a yellow water festival near Bagoor.

மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா

மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா
பாகூர் அருகே மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகூர்
பாகூர் அருகே மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

24 பேருக்கு கொரோனா

பாகூர் கொம்யூன் சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடந்துள்ளது. அதன்பின்னர், அந்த குடும்பத்தில் சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து அதே பகுதியை சேர்ந்த பலர் காய்ச்சல், இருமல் போன்றவற்றால் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் நேற்று சோரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர். அப்போது 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சோரியாங்குப்பம் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் குருவிநத்தம் கிராமத்திலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல் நிலை மோசமாக உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். மற்றவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வீட்டு தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.