மாநில செய்திகள்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம் + "||" + Water level status of Bhavani Sagar Dam

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 3,023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையில் 30.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2. இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது- பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
3. பவானிசாகர் அணை நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை நெருங்குகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 7,051 கன அடியாக உயர்ந்துள்ளது.
5. தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது.