மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + Chance of rain in Tamil Nadu for next 5 days Meteorological Center

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 8-ம் தேதி(இன்று) முதல் 12-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 12-ம் தேதி வரை தென் கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதே போல தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரை 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் திராவிட கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை: சீமான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தக்கலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் குற்றம்சாட்டினார்.
2. தமிழகத்தில் இன்று 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 16,130 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 16,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 16,637 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 2- நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைவு
தமிழகத்தில் 2- நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைந்துள்ளது.