மாநில செய்திகள்

கடன் தொல்லையால் பைனான்சியர் தற்கொலை + "||" + Financier commits suicide due to debt harassment

கடன் தொல்லையால் பைனான்சியர் தற்கொலை

கடன் தொல்லையால் பைனான்சியர் தற்கொலை
கடன் தொல்லையால் பைனான்சியர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் பழைய தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 47). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் பாண்டியன், சிலரிடம் கடன்வாங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பாண்டியனிடம் கடன் பெற்றவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பைனான்ஸ் தொழிலுக்காக வாங்கிய கடனை பாண்டியனால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டியன், நேற்று முன்தினம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.