மாநில செய்திகள்

போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு + "||" + Minister Rajakannapan announces 2,200 new buses for Transport Corporation in the Assembly

போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களை நவீனமாக்கும் பொருட்டு ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் புதிதாக பி.எஸ்.-6 குறியீட்டிற்கு இணக்கமான 2,213 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.


அரசு போக்குவரத்து நிறுவனங்களின் கட்டிடங்களின் கூரையில் சூரியசக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்படும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளான பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும்.

திருவள்ளூர மாவட்டம், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு ரூ.30 கோடியே 21 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும். மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்த கட்டிடமும், ஓட்டுனர் தேர்வு தளமும் ரூ.52.80 கோடி செலவில் கட்டப்படும். கோவை மாவட்டம், கோவை (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.49.80 கோடி மதிப்பில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
2015-ம் ஆண்டு கனமழையில் சென்னை தத்தளித்த நிலை மீண்டும் வராத வகையில், நகரம் முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
2. தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
3. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
4. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
5. ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.