மாநில செய்திகள்

சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு + "||" + Trouble caused by an attempt to set fire to the art gallery where the assembly meeting will take place

சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
சட்டசபை கூட்டம் நடந்து வரும் கலைவாணர் அரங்க வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் கலைவாணர் அரங்க வளாகத்திற்குள் நுழைந்தார். அவர் முதல் ‘கேட்’ பாதுகாப்பை கடந்து 2-வது ‘கேட்’ பத்திரிகையாளர் அறை அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கூறினர்.


தீக்குளிக்க முயற்சி

அப்போது திடீரென அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து, அதில் உள்ள மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் வேகமாக ஓடிவந்து அவரை பிடித்தனர். அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்ததுடன், அவர் மீது தண்ணீர் ஊற்றி, தீக்குளிக்கும் முயற்சியை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

தஞ்சையை சேர்ந்தவர்

அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஆறுமுகம் என்பதும், தஞ்சையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

அவர் அந்த பகுதியில் உள்ள கேபிள் டி.வி.யில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவள்ளூரில் தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
2. சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வழிகாட்டு குழு
சென்னையில் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. ‘போர்டு’ கம்பெனி விவகாரம்: சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம்
‘போர்டு’ கம்பெனி விவகாரம்: சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம்.
4. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து பிரசாரம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்டசபையில் நாளை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.