மாநில செய்திகள்

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன + "||" + 4 lakh vaccines came to Chennai from Pune

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் வந்து உள்ளன. 

இதனிடையே மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதியன்று 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 34 பெட்டிகளில் 4 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
2. கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி
கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
3. மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதலாவதாக பேட்டிங்
இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.
5. தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1,100 கோடி ரூபாய் கடன் உதவி
சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.