ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2021 8:36 AM GMT (Updated: 2021-09-09T14:06:51+05:30)

தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் மின் இணைப்பு வேண்டி 18 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தெரிவித்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர், தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி இந்த திட்டத்தின் மூலம் உளுந்தூர்பேட்டையில் உள்ள 4,554 விவசாயிகளும் பயனடைவார்கள் என்றும் இந்த திட்டம் முதல்-அமைச்சரால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Next Story